வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு

vels international
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ , ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Share this story