விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெய்வ மச்சான்’... டிரெய்லர் வெளியீடு !

vemal

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெய்வ மச்சான்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர் தோல்விகளை சந்தித்த வந்த நடிகர் விமலுக்கு, ‘விலங்கு’ வெப் தொடரின் வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்தது. இதனால் விமல் நடிப்பில் உருவான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

vemal

அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தங்கையாக பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் பாண்டியராஜ் விமலுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர ஆடுகளம் நரேன், காமெடி நடிகர் பாலசரவணன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தை  உதய் பிரக்ஷன் மற்றும் மெஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். காட்வின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story