விமல் நடித்துள்ள "பரமசிவன் பாத்திமா" டிரெய்லர் ரிலீஸ்

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் ’சார்' என்ற திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தனது 34-வது படமான 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
சம்பவம்...
— director esakki (@director_esakki) March 14, 2025
Happy to unveil the Tamil trailer of #paramasivanfathima
Trailer link 🔗 https://t.co/NmFyQ6Fgqp
Best wishes @director_esakki directorial
Produced by @LCMOVIES_2006@ActorVemal @deepan_composer
@mynaasukumarm@dir_thalapathi @trendmusicsouth @onlynikil pic.twitter.com/rYjnC2LYc7
இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் 'பரமசிவன் பாத்திமா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.