முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விமல்.. ‘துடிக்கும் கரங்கள்’ டிரெய்லர் வெளியீடு !

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரிப்பில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. வழக்கமாக கிராமத்து கதைக்களங்களில் நடித்து வரும் விமல், இந்த படத்தின் மூலம் முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்து படைக்கும் இந்த படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.