அடுத்த வாரம் சரவெடி தான்.. 'தளபதி 68' குறித்து சுவாரஸ்ய அப்டேட்

vijay

 விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் தொடங்கிய விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை படப்பிடிப்பிற்கு பிறகு ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ரமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

thalapathy 68

'லியோ'  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று  எதிர்பார்க்கப்பட்டது. முதலில் தெலுங்கில் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவதாகவும், சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதற்கிடையே விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, சென்னை - 28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர். 'தளபதி 68' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு அந்நிறுவனம் 125 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த படத்தை அதிகாரப்பூர்வ அடுத்த வாரம் அறிவிக்கவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

 

 

Share this story