தளபதி 68 படத்தில் 90ஸ் நட்சத்திரங்களை களமிறக்கிய வெங்கட் பிரபு

தளபதி 68 படத்தில் 90ஸ் நட்சத்திரங்களை களமிறக்கிய வெங்கட் பிரபு

‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. 


இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Share this story