‘கஸ்டடி’-க்காக தமிழில் டப்பிங் பேசிய நாகசைதன்யா.. கலக்கலான வீடியோ வெளியீடு !

கஸ்டடி படத்திற்காக நடிகர் நாகசைதன்யா தமிழிலேயே டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரெய்லருக்கு முன்னரே புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது தயாரிப்பு பணியில் உள்ள இப்படத்தின் டப்பிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் நாகசைதன்யா, தமிழிலும் டப்பிங் கொடுத்துள்ளார். இது குறித்து கலக்கலான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.@chay_akkineni pranks @vp_offl with his Tamil dubbing skill for #Custody.
— Only Kollywood (@OnlyKollywood) May 2, 2023
So as touted, the star himself dubs on his own and have excelled in it.https://t.co/slsiGywJVZ #CustodyOnMay12 #CustodyTrailer #CustodyPromo @srinivasaaoffl @jungleemusicSTH @SS_Screens pic.twitter.com/77lSOSKG9h