'வெந்து தணிந்தது காடு 2'-ல் நடிக்க ஆர்வமாக இருக்கும் சிம்பு... தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட் !

vtk

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

vtk

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டடித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்டது. 

இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேசன் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை இயக்குனர் கெளதம் மேனன் எழுதி வருகிறார். இந்த பணிகள் நிறைவுபெற்றவுடன் விரைவில் படப்பிடிப்பு துவங்கும். இந்த படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஆர்வமாக உள்ளார் என்று கூறினார். 

Share this story