“பிரியாணியோ, வாழ்க்கையோ வேணும் மச்சா பீஸ்”!- லிரிக் வீடியோ ரிலீஸ்

ச்

பிரபல யூடிபூர்களான கோபி, சுதாகர் படத்தின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

’பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் "oh god beauyiful" என்ற படத்தை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


இந்நிலையில் கோபி, சுதாகர் படத்தின் லிரிக் வீடியோ வெளியானது. “பிரியாணியோ, வாழ்க்கையோ வேணும் மச்சா பீஸ்” என தொடங்கும் அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.


 

Share this story