வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெப்பன் படக்குழு உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெப்பன் படக்குழு உதவி 

தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் வசந்த் ரவி. ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்திலும் அவர் ரஜினிக்கு மகனாகவும், எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். இதையடுத்து வெப்பன் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வசந்த் ரவியுடன் இணைந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘வெப்பன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜின் போஸ்டர் வெளியானது. 

null



இந்நிலையில், சென்னையில் வௌ்ளம் பாதிக்கப்பட்ட மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் வெப்பன் படக்குழுவினர் உதவி செய்துள்ளனர். இரண்டாயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 
 

Share this story