மதுரை மீசை மோகன் மறைவுக்கு பிரபல நடிகர் காளிவெங்கட் இரங்கல்

மதுரை மீசை மோகன் மறைவுக்கு பிரபல நடிகர் காளிவெங்கட் இரங்கல்

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் குணசித்திர வேடங்களை ஏற்று நடித்து வந்த நடிகர் மதுரை மோகன். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். மதுரையில் அரசு வேலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோதே, நடிப்பின் மீது இருந்த காதலால் அவர் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வீரன். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொடந்து கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால அவதிப்பட்டு வந்த இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல நடிகர் காளிவெங்கட் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Share this story