'வேட்டைக்காரன்' பட வில்லன் நடிகர் சலீம் கௌஸ் திடீர் மரணம்!

salim-ghouse-3

நடிகர் சலீம் கௌஸ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் சலீம் கௌஸ் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான வெற்றிவிழா படத்தில் சிந்தா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் பிரபலமானது. அதையடுத்து சின்ன கவுண்டர், திருடா திருடா, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம்னா பயம் என்ற டயலாக் மூலம் அனைவரையும் மிரட்டினார். மலையாளம் இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

Salim ghouse

சலீம் கௌஸ் மறைந்ததை அவர் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். "நேற்று இரவு அவரை கோகிலாபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், இன்று காலை அவர் காலமானார். அவர் வாழ்வில் துக்கங்களை ஒதுக்கி வாழ்வை அனுபவித்து வாழ்ந்தார். அவர் கடைசி நேரத்தில் கஷ்டப்படவில்லை, யாரையும் சார்ந்திருப்பதை அவர் விரும்பியிருக்க மாட்டார். சுயமரியாதை மிகுந்த மனிதராக இருந்தார். அவர் ஒரு பன்முக நடிகர், ஒரு தற்காப்பு கலைஞர், ஒரு நடிகர், ஒரு இயக்குனர் மற்றும் ஒரு அழகான சமையல்காரர்." என்று அவர் மனைவி தெரிவித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டகால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

Share this story