பிரபல இயக்குநர் நாகேந்திரன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்

nagendran

பிரபல இயக்குனரும் நடிகருமான, நாகேந்திரன் இன்று காலமானார். இவர் சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் நாகேந்திரன். கடந்த 2015-ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான ‘காவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நாகேந்திரன். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.

nagendran

இதில் சமுத்திரக்கனி, புன்னகைப்பூ கீதா, நமோ நாராயணன், எம் எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, அஸ்வின் ராஜா, இமாம் அண்ணாச்சி ஆகியோர் நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நாகேந்திரன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Share this story