மூத்த இயக்குனர் சண்முக பிரியன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி !

shanmuga priyan

மூத்த இயக்குனர் சண்முக பிரியன் உடல் நலக்குறைவால் காலமானார். 

தமிழ் சினிமாவில் 90-களின் தொடக்கத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் சண்முக பிரியன். ராமராஜன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவர் இயக்கி திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

shanmuga priyan

பிரபு நடிப்பில் வெளியான ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவு கரங்கள், வெற்றிவிழா, பிரம்மா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் விளங்கிய அவர், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாரடைப்பால் சண்முக பிரியன் இன்று மாலை காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

 

Share this story