பிரபல பாடகி மறைவு - திரையுலகினர் இரங்கல்

singer

போஜ்புரி, மைதிலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நாட்டுப் புற பாடல்களை பாடி புகழ் பெற்றவர் பாடகி ஷார்தா சின்ஹா. இந்தி படங்களிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படத்தில் ‘தார் பிஜிலி’ பாடல் இவர் பாடிய நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசைத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி 1991ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2018ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.   

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு  முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று(05.11.2024) உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 72.  

இவரது மறைவு இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Share this story