பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எம் முத்துராமன் மறைவு!
1641881515905
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எம் முத்துராமன் காலமானார்.
ராஜவேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல தமிழ்படங்களைத் தயாரித்தவர் எம் முத்துராமன். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களை அவர் தயாரித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா 'பேரப்பிள்ளை படத்தை அவர் தான் தயாரித்திருந்தார். மேலும் ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் எம் முத்துராமன் சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவரது மைறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

