4 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் வெற்றியின் ‘மெமரீஸ்’.. டிரெய்லர் மற்றும் ரிலீஸ் அறிவிப்பு !

Memories
 வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெமரீஸ்’ படத்தின் ரிலீஸ் மற்றும் டிரெய்லர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் சத்தமில்லாமல் சில வெற்றிப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி. அவர் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’. 

Memories

க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் மனோகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசுக்கு தயாரான இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. 

 

 

 

Share this story