‘கடந்த காலம் நம்மை துரத்திக்கிட்டே இருக்கும்’ - மெமரீஸ் டிரெய்லர் வெளியீடு !

MEMORIES

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெமரீஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. முதல் படமே வெற்றி படமாக அடுத்து ஜீவி, ஜீவி 2, ஜோதி, வனம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திரைப்படங்கள் சத்தமில்லாமல் வரவேற்பை பெறுகிறது. 

MEMORIES

அந்த வரிசையில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெமரீஸ். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் மனோகரன் இயக்கியுள்ளார்.

MEMORIES

இந்த படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசுக்கு தயாரான இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்து வந்தது. இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story