லாட்டரி குறித்து பேசும் ‘பம்பர்’.. நடிகர் வெற்றி படத்தின் டீசரை வெளியிட்ட ஆர்யா !

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘பம்பர்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜீவி 2’ படத்திற்கு பிறகு நடிகர் வெற்றி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘பம்பர்’. வழக்கமாக வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கும் வெற்றி இந்த படத்திலும் அதேபோன்று நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். கேரளா லாட்டரி கதைக்களத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் ஹரீஷ் பேரடி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் சு.தியாகராஜா என்பவர் தயாரித்து வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகம் மற்றும் கேரள எல்லையோர பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். லாட்டரி குறித்து பேசியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Happy to release the Teaser of #BUMPER https://t.co/Yej7ltNBbg@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar #GovindVasantha @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @tipsofficial @onlynikil @murukku_meesaya pic.twitter.com/BQdHM76Hwt
— Arya (@arya_offl) April 6, 2023