மிரட்டலாக உருவாகியுள்ள வெற்றியின் ‘இரவு’.. டீசர் வெளியீடு !

iravu

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘இரவு’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

‘பக்ரீத்’ படத்தின் மூலம் இயக்குனரான பிரபலமான ஜெகதீசன் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இரவு’. கோஸ்ட் டிராமா திரைப்படமாக உருவாகும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதைக்களத்தை கொண்டது. M10 Productions மற்றும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். 

 

இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷீ, கல்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீடியோ கேஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களே இப்படம். 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story