சாம் சிஎஸ் இசையில் ‘உன்ன பாத்தாலே பிடிக்குது’... ‘ரெட் சாண்டல்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

Red Sandal Wood

 வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட் சாண்டல்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி. அந்த வகையில் செம்மரக் கடத்தல் தொழிலாளர்களை பற்றி உருவாகும் படத்தில் தற்போது வெற்றி நடித்துள்ளார். ஜெ.எம். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் இப்படம் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. 

Red Sandal Wood

‘கழுகு’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய குரு ராமானுஜம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாகவும், கதாநாயகியாக தியா மயூரிகா நடித்துள்ளனர். இப்படத்தில் கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்துள்ள இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

Red Sandal Wood

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. உன்ன பாத்தாலே பிடிக்குது என தொடங்கும் அந்த பாடலை புவனா ஆனந்த் பாடியுள்ளார். யுகபாரதி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story