சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் மற்றும் மணிரத்னம் திரைப்படங்கள்
1698122343300

ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெற உள்ள இந்த விழாவில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் தேர்வாகியுள்ளன. இது தவிர, பல திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.