பிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

பிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பேய்க்கும் மனிதன் மீது காதல் வரச் செய்து ஹாரர் கதையை மிகவும் வித்தியாசமான கோணத்தில் காண்பித்து வெற்றி பெற்றார் மிஷ்கின். அதையடுத்து தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியா இரண்டாம் பாகத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

பிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

இந்நிலையில், பிசாசு 2 படம் பார்த்த இயக்குநர் வெற்றிமாறன், என்னயா இப்படி ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறாய் என்றும், நல்ல திரைப்படம் என்றும் பாராட்டி இருக்கிறார். இதனால், பிசாசு 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Share this story