3 பாகங்களாக உருவாகிறதா வெற்றிமாறனின் ’வாடிவாசல்’?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் கனவு திரைப்படமாக கருதப்படும் ’வாடிவாசல்’ திரைப்படம் விரைவில் தொடங்கப்படுகிறது. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
கடந்த 2017இல் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி மதுரையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மெரினாவில் நினைத்து பார்க்க முடியாத அளவில் லட்சக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவையே திரும்பிக் பார்க்க வைத்தது. சமூக பிரச்சனைகளை தனது படங்களில் தீவிரமாக சொல்லும் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இப்படத்தில் எவ்வாறு காட்சிப்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.
அந்த அறிவிப்புடன் மிரட்டலான ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அந்த ப்ரோமோவில் சூர்யா, ஜல்லிக்கட்டு வாடிவாசலில் காளையை பிடிக்க நிற்பது போல காட்சி இடம்பெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் வாடிவாசல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ’விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்க தொடங்கினார். அப்படங்களுக்கு பல ஆண்டுகள் ஆனதால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா செல்லும் இடங்கள் எல்லாம் ’வாடிவாசல்’ தொடங்குவது எப்போது என கேள்வி எழுப்ப தொடங்கினர்.
As per VP, #Suriya's #VaadiVaasal Going to be taken in 3 Parts 😲🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) December 30, 2024
VetriMaaran has penned the script & screenplay like that and shoot may be taken at a stretch for all 3 parts🎬 pic.twitter.com/FwozdsPUhS
இதனிடையே வாடிவாசலின் கிராஃபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற்று வருவதாகவும், சூர்யாவுடன் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க வைக்க ஒரு காளையை அவர் வீட்டில் வைத்து வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. ஒரு வழியாக ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியான நிலையில், வாடிவாசல் திரைப்படம் விரைவில் தொடங்குகிறது. மேலும் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை மூன்று பாகங்களாக எடுக்க இருப்பதாகவும், அதற்கு அனைத்திற்கும் திரைக்கதை எழுதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வாடிவாசல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் (V creations) கலைப்புலி தாணு சமீபத்தில் சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' திரைப்பட ப்ரமோஷனில் ஈடுபட்டார். அப்போது வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேட்ட போது, சூர்யா தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் இந்தியா வந்தவுடன் வெற்றிமாறனுடன் ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளது. பொங்கலுக்கு 'வாடிவாசல்' குறித்து அப்டேட் வரும் கூறியுள்ளார். சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம் என வெற்றி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார்.