பாராட்டைப் பெறும் வெற்றிமாறனின் ’விடுதலை 2’!

viduthalai 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ’விடுதலை 2’ திரைப்படம் இன்று (டிச.20) வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கனிமவளத்தை திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி இயக்கம் அமைத்து போராடுகிறார். கிட்டதட்ட மக்களை காக்கும் மாவீரன் போல வாழும் விஜய் சேதுபதி அரசிடம் பிடிபட்டாரா, மற்றும் அவரின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து விடுதலை 2 திரைப்படம் உருவாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ’விடுதலை 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.



இன்று தமிழக அரசு அனுமதியுடன் தமிழ்நாட்டில் காலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து விடுதலை 2 திரைப்படம் சமூக வலைதளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விடுதலை 2 பயங்கரமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் திராவிடம், தமிழ் தேசியம் கம்யூனிஸம் அரசியலை வலுவாக பேசியுள்ளார் எனவும், விஜய் சேதுபதி மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் படத்தை தாங்கியுள்ளனர் எனவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.



அதே நேரத்தில் முதல் பாதியில் சில இடங்களில் படம் மெதுவாக நகர்வதாகவும் கூறுகின்றனர். மற்றொரு விமர்சனத்தில் விடுதலை 2 முதல் பாதி சுமாராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் திரைக்கதை, வசனங்கள், மேக்கிங் ஆகியவை பாராட்டும்படியாக உள்ளதாகவும், மொத்தமாக இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டர்களில் பார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


விடுதலை 2 படம் பார்த்த அனைவரும் விஜய் சேதுபதி மற்றும் கென் கருணாஸ் ஆகியோரின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனிடையே வெற்றிமாறன் இயக்கமும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொல்லாதவன் படத்தில் தொடங்கி விடுதலை 2 வரை தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குநர் என சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர். விடுதலை 2 படத்தில் தணிக்கை குழு பரிந்துரை செய்ததால் 8 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story