வாடிவாசல் கைவிடப்பட்டதா? இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி
தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சூர்யா நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார்.இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. VFX வேலைகள் கூட வெளிநாட்டில் நடந்து வருகிறது என தகவல் வெளிவந்த நிலையில், திடீரென கைவிடப்பட்டுவிட்டது என திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.இப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கிறார் உள்ளிட்ட பல வந்தந்திகள் பரவி வந்தது.
ஆனால், வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இருவரும் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.அப்போது மேடையில் பேசிய வெற்றிமாறன், "ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கோம், படம் வருது வருதுனு. கூடிய விரைவில் படத்தை துவங்கிவிடுவோம்" என கூறி படத்தை பற்றிய அனைத்து வாந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.