வெற்றிமாறன் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் இணைந்த மாஸ் ஹீரோ... பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படம் !

vetrimaran

வெற்றிமாறன் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் மாஸ் ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

vetrimaran

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை,  அசுரன் ஆகிய சூப்பர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு சூரி மற்றும் விஜய் சேதுபதி என இரு கதாநாயகர்கள் நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி முடித்துள்ளார்.‌ தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

vetrimaran

பொதுவாக ஒரு படத்தை முழுமையாக முடித்த பிறகே அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார். அந்த வகையில் 'விடுதலை' படத்தின் பணிகளை முடித்த பிறகு சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஜல்லிக்கட்டு ஒத்திகை நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றுள்ளது. 

vetrimaran

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்த வெற்றிமாறன் மூன்று கதைகளை கூறியுள்ளார். அதில் ஒரு கதை பிடித்ததால் வெற்றிமாறனுடனான கூட்டணியை ஜூனியர் என்டிஆர் உறுதி செய்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது‌. 'வாடிவாசல்' படத்தை முடித்து இந்த ஆண்டு இறுதியில் படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்மை கதாபாத்திரத்திலும், இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக  உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story