‘விடுதலை பாகம் 1’ வெற்றி – ‘வெற்றிமாறன்’ கொடுத்த அன்பு பரிசு.

photo

‘விடுதலை பாகம் 1’ படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வெற்றிமாறன் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இந்த தலவலை அறிந்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

photo

இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தவிர்கமுடியாத ஒரு இயக்குநராக வலம் வருகிறார். இவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக ஹிட் தான் என கண்னை மூடிக்கொண்டு சொல்லும் அளவிற்கு தரமான கதைகளை படமாக்குவதில் வல்லவர். இவர் தற்போது விடுதலை படத்தை இயக்கியுள்ளார். சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி போராளியாவும் நடித்துள்ள படத்தில் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த  இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

photo

கடந்த 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்த நிலையில் தற்போது தங்க நாணயத்தை விடுதலை படம் ஒட்டு மொத்த டீமுக்கும் வாங்கி கொடுத்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

Share this story