கமலுடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்... அப்போ சூர்யா ‘வாடிவாசல்’ ?

vetrimaran

‘விடுதலை’ படத்திற்கு பிறகு கமலுடன் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

vetrimaran

‘விடுதலை’ படத்திற்கு பிறகு சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இந்த படத்திற்கு பிறகே ‘வாடிவாசல்’ படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இதையடுத்து வரும் 2025-ஆம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் படத்தை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this story