பிரம்மாண்டமாக நடைபெறும் 'விடுதலை' ஆடியோ வெளியீடு... இளைராஜா இசையால் அதிரப்போகும் அரங்கம் !

viduthalai

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தினீ ஆடியோ மட்டும் டரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.‌

தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் வெற்றிமாறன். அவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

viduthalai

இந்தபடத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

viduthalai

கடந்த மாதம் இப்படத்திலிருந்து இளையராஜா இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆடியோ வரும் மார்ச் 8-ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story