வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த தனுஷ்... 'விடுதலை' குறித்து செம அப்டேட்

viduthalai

 வெற்றிமாறனுக்காக நடிகர் தனுஷ் புதிய சம்பவம் ஒன்று செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தனுஷ் படத்தில் உருவான அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கின. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த முதல் பாடலை வெற்றிமாறனுக்காக நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலை நடிகர் தனுஷ் வரும் 8-ஆம் தேதி வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story