ஓடிடியிலும் வெற்றிமாறனின் 'விடுதலை'... உற்சாகத்தில் ரசிகர்கள் !

viduthalai

வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்துள்ளனர்.  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

viduthalai

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். 

viduthalai

கடந்த மாதம் இறுதியில் வெளியாக இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.‌ பிரபலங்கள் இந்த படத்தை பார்த்த படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜீ 5 ஓடிடித்தளத்தில் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே நேரமின்மை காரணமாக திரையரங்குகளில் நீக்கப்பட்ட 20 நிமிட காட்சிகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது‌.  ‌

Share this story