அட்டகாசமாக வெளியாகும் வெற்றிமாறனின் 'விடுதலை'... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

viduthalai

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரு பாகங்களாக உருவாகி வருகிறது வெற்றிமாறனின் 'விடுதலை'. இந்த படத்தில் முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

viduthalai

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‌

viduthalai

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 

Share this story