‘விடுதலை’ டிரெய்லர் எப்போது ?.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

viduthalai

 வெற்றிமாறனின் ‘விடுதலை‘ படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகியுள்ளது ‘விடுதலை’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

viduthalai

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

viduthalai

வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

Share this story