குலதெய்வ வழிபாடுகளை மையப்படுத்திய கதை "வேட்ட சாமி" -யார் ஹீரோ தெரியுமா ?
அருள்நிதி, அமீர் நடிப்பில் மைல்ஸ் ஃபெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள ‘வேட்ட சாமி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்ஜே பாலாஜி, லோகேஷ் கனகராஜ் வெளியிட்டனர். வழக்கமான ஹீரோயின் கேரக்டர் இல்லாமல் கதையையும், கதாபாத்திரங்களையும் மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது.
நெல்லை மாவட்ட பகுதியின் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் போன்ற குலதெய்வ வழிபாடுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன் நடித்துள்ளனர். ‘பம்பர்’ எம்.செல்வகுமார் எழுதி இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் செய்ய, ஜி.துரைராஜ் அரங்கம் அமைத்துள்ளார். சிறுத்தை கணேஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

