'வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் வெற்றி... கேக் வெட்டி கொண்டாடிய கெளதம் மேனன் !

veettaiyaadu vilaiyadu

கமலின் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் ரீ ரிலீஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதை படக்குழுவினர் கேக் கொண்டாடியுள்ளனர். 

 கடந்த 2006-ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. டிசிபி ராகவன் என்ற கதாபாத்திரத்தில் கமல்  நடித்திருந்தார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, ஜீவன் உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

veettaiyaadu vilaiyadu

சைக்கோ த்ரில்லரில் உருவான இப்படத்தை செவந்த் சேனல் நிறுவனம் தயாரித்தது. வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லரில் உருவான இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். பேன் பாய் சம்பவமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

veettaiyaadu vilaiyadu

வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லரில் பாணியில் உருவான இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியாகி 17 ஆண்டு கடந்த நிலையில் மீண்டும் இப்படம் கடந்த மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளில் இப்படத்தை பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இப்போது தான் இந்த படம் வெளியானது போல் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

veettaiyaadu vilaiyadu

தற்போது மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை தயாரிப்பாளருடன் இணைந்து இயக்குனர் கெளதம் மேனன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடனிருந்தார். 

Share this story