வேட்டையன் இசை வெளியீட்டு விழா எப்போது?

Aniruidh

ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சித்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vettaiyan

அதே நேரத்தில், இப்போது முதலே ரஜினி, சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் வேட்டையன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னதாக கங்குவா என்ற பெரிய பட்ஜெட் படத்தோடு வேட்டையன் வெளியாவது இரண்டு படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படுத்தும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிகிறது. ஏற்கனவே வேட்டையன் இசையமைப்பாளர் அனிருத், படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்பாடலை ஜெயிலர் படத்தின் பிரபலமான ‘ஹுகும்’ பாடலை எழுதிய சூப்பர் சுப்பு எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story