அடிப்பொலிக்க வன்னல்லே! வேட்டையன் அல்லே - மனசிலாயோ பாடல் வெளியானது

rajini

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தில் முதல் சிங்கிள் 'மனசிலாயோ' பாடல் வெளியானது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் இப்படத்தில் போலீசாக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறை என்கவுண்டரால் ஏற்படும் சிக்கல் இப்படத்தின் மையக்கதை என கூறப்படுகிறது.


இந்நிலையில் வேட்டையன் படத்தின் சிங்கிள் மனசிலாயோ இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் மால்டா என்ற ஃபோக் இசை வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மனசிலாயோ பாடலின் சிறப்பம்சமாக தமிழ் சினிமாவில் பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ள மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பம் (AI) மூலம் வடிவமைத்து இந்த பாடலை பாட வைத்துள்ளனர்.இந்த பாடல் லிரிக் வீடியோவில் அனிருத் தோன்றுகிறார். இந்த [பாடல் வரிகள் மலையாளம் கலந்த தமிழில் இடம்பெற்றுள்ளது. வேட்டையன் பாடலில் அனிருத் தோன்றுவார் என எதிர்பார்க்கலாம். அதேபோல் ரஜினியுடன், நடிகை மஞ்சு வாரியர், குக் வித் கோமாளி புகழ் ரக்‌ஷன் ஆகியோர் நடனமாடுகின்றனர். மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share this story