வேட்டையன் ரிலீஸ் எப்போது..? .. கமலுடன் மோதுகிறாரா ரஜினி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இடையே தொழில் ரீதியான போட்டி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறது. சினிமாவில் நல்ல நண்பர்களாக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடியாக 'ஜெயிலர்' படத்தின் மூலம் அந்த வசூல் வேட்டையை ரஜினிகாந்த் முறியடித்தார்.அதற்கு போட்டியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கமல் சொதப்பி விட்டார். இந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் இணைந்து 1100 கோடி வசூல் சாதனை படைத்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் திரைப்படம் கமல்ஹாசன் படத்துடன் போட்டிப் போட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும் தரமான படத்தை கொடுத்து ஆஸ்கர் கதவு வரை தட்டிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்துடன் வேட்டையன் திரைப்படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்துடன் கிளாஷ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு பெருமைமிகு படைப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவுடன் மோதலை தவிர்த்த சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்துடன் மோத போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கு போட்டியாக அக்டோபர் 30-ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. விரைவில் லைகா நிறுவனம் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என தெரிகிறது.