வேட்டையன் படத்தின் புது அப்டேட் என்ன தெரியுமா?

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.கடைசியாக இந்த படத்தின் ஒரு சண்டை காட்சி பாண்டிச்சேரியில் படமாக்கப்படுவதாகவும். அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.இந்தநிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை துஷாரா. அதைதொடர்ந்து சமீபத்தில் நடிகர் பகத் பாசில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தது குறிப்பிடத்தக்கது.

Dhushara
 

Share this story