வேட்டையன் ரிலீஸ்: சமாதான புறா பறக்கவிட்டு கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

vettaiyan
வேட்டையன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, வாணியம்பாடி உள்ள திரையரங்கில் சமாதான புறாவை பறக்கவிட்டு, ரஜினி கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடினர்.
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வேட்டையன் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அனுமதியுடன் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ’வேட்டையன்’ திரைப்பட சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்நிலையில் அனைத்து மாட்டங்களிலும் ரஜினி ரசிகர்கள் பல்வேறு விதமாக வேட்டையன் பட ரிலீசை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உள்ள திரையரங்கில், வேட்டையன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு சமாதான புறாவை பறக்கவிட்டும், கற்பூர சூடம் ஏற்றியும், ரஜினி கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் வேட்டையன் ரிலீஸை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

Share this story