ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு

ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- த.செ ஞானவேல் கூட்டணியில் தயாராகிவரும் தலைவரின் 170 படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மும்பை உள்ளிட்ட இடங்களில்  விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு 

இந்நிலையில், தற்போது ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடப்பாவில் உள்ள கல்குவாரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story