வேட்டையன் : ஃபஹத், ரஜினியின் நீக்கப்பட்ட காட்சி ரிலீஸ்
ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை (deleted scene) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ரஜினி - ஃபஹத் பாசில் இடையிலான உரையாடலாக நீளும் அந்தக் காட்சியின் ஓரிடத்தில் ரஜினி, “பேட்ரிக் நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க” என ஃபஹத் பாசிலிடம் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் ஃபஹத் பாசில், “உங்கள விடவா சார்” என கேட்கிறார். 31 நொடிகள் மட்டுமே உள்ள ஜாலியான இந்த உரையாடல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனினும் லைகா நிறுவனம் இந்த வீடியோவை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இரண்டு பிரதான நடிகர்கள் மாறி மாறி தங்களை கலாய்த்து கொள்ளும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
A dose of humour from the hunter! 🤩 Enjoy this deleted scene between Athiyan and Patrick, a lighter side of VETTAIYAN 🕶️ you dint see on screen! ✨ #VettaiyanRunningSuccessfully 🕶️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial… pic.twitter.com/DbGvpSte47
— Lyca Productions (@LycaProductions) October 15, 2024
ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ரஜினியின் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. மழை உள்ளிட்ட காரணங்களால் வரும் நாட்களில் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.