உலகளவில் ரூ.650 வசூலை அள்ளிய விக்கி கவுசலின் "சாவா"
1741258252000
விக்கி கவுசல்- ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' திரைப்படம் உலகளவில் ரூ.650 வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி சாவா படத்தை பாராட்டி இருந்தார். இந்நிலையில், உலகளவில் 'சாவா' படம் ரூ.650 வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

