விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்
1733057274554
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். நீண்ட நாட்கள் அப்டேட் ஏதுமின்றி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக. அதை படக்குழு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.