அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து அலறவிடும் 'விடாமுயற்சி' படக்குழு : புதிய போஸ்டர் வெளியீடு!

Vidaamuyarchi


மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 12.07 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் முக்கிய  கதாபத்திரத்தில் நடிக்கும் பிக் பாஸ் புகழ் ஆரவின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 

Share this story