விடாமுயற்சி படப்பிடிப்பு: அப்டேட் வெளியிட்ட நடிகர் அர்ஜுன்
1725345012000
நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களின் சந்திப்பின் போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விடாமுயற்சி' வெளியாக உள்ளது. சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது, அதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களின் சந்திப்பின் போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் அஜித் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.