இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விடாமுயற்சி...அஜித் -திரிஷா படங்களை பகிர்ந்த படக்குழு
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
‘மங்காத்தா' திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து 'விடாமுயற்சியில்' நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக 'விடாமுயற்சி' உருவாகியிருக்கிறது.
In the final leg of the shoot! 🎬 The journey of persistence edges closer. 🔥#VidaaMuyarchi From Pongal 2025 #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra… pic.twitter.com/yCwFoe5Gcc
— Lyca Productions (@LycaProductions) December 17, 2024
இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித், திரிஷாவின் புகைப்படங்களை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.