‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் வங்கும் சம்பளம் இவ்வளவா!..... வாய் பிளக்க வைக்கும் தகவல்.

photo

தல அஜித்குமார் நடிப்பில் அடுத்து தயாராகவுள்ள திரைப்படம் “விடாமுயற்சி”. மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராவுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் எவ்வளவு தொகையை சம்பளமாக பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

photo

அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது விடாமுயற்சியில்  மூன்றாவது முறையாக மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் அதிரடி நிறைந்த படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பின்னணி இசை பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் சுமார் 5 கோடியை சம்பளமாக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

photo

சமீபத்தில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்ட நிலையில் அடுத்தடுத்து படம் குறித்த முக்கிய அறிவிப்புகள், நடிகர், நடிகைகள் தேர்வு குறித்து தகவல்  வெளியாகும் என எதிர்பார்க்கலாம். “விடாமுயற்சி”- “ முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது”.

Share this story