விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல்

விடாமுயற்சி படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாக தகவல்

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த நிலையில்,  அவர் அடுத்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. துணிவு படப்பிடிப்பின்போதே அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவித்த நிலையில், அவரை மாற்றி இயக்குனர் மகிழ் திருமேனியை தேர்வு செய்தனர். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்தனர். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் படபிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்த முடிவு செய்து உள்ளதாகவும், சென்னை மற்றும் ஐதராபாத்திலும் சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள் விவரம் விநாயகர் சதுர்த்தியில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரிஷா, தமன்னா ஆகியோர் நாயகிகளாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Share this story